தி. மு. க. - தேர்தல் அறிக்கை
ஒருங்கிணைப்பு
VGLUG அறக்கட்டளை, விழுப்புரம்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
மாநில சுயாட்சி
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
பேரறிஞர் அண்ணா அவர்களின் மாநில சுயாட்சிக் கொள்கையை நிறைவேற்றும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஒன்றிய - மாநில உறவுகளை ஆராய்வதற்காக, 1969 ஆம் ஆண்டில் நீதிபதி இராசமன்னார் தலைமையில் நீதிபதி சந்திராரெட்டி, டாக்டர். ஏ.இலட்சுமணசாமி முதலியார் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவை முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு அமைத்தது. ஒன்றிய - மாநில உறவுகள் குறித்துப் பரிசீலனை செய்ய நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை 1983 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அமைத்தது. மீண்டும், 2000 ஆம் ஆண்டில் நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் ஒரு குழுவையும் ஒன்றிய அரசு அமைத்தது. அதன் தொடர்ச்சியாக, 2004 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தபோது, மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டுமென்று தி.மு.க. வலியுறுத்தியது, அதன் காரணமாக, 2007 இல் ஒன்றிய மாநில அரசுகளின் உறவுகளைச் சீரமைப்பதற்காக நீதிபதி எம்.எம். பூஞ்சி தலைமையில் ஒன்றிய அரசு ஓர் ஆணையத்தை அமைத்தது.
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
எனினும் முக்கியமான இந்தத் தேசியப் பிரச்சினையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஆகவே, மாநில சுயாட்சி மற்றும் மாநில உறவுகள் குறித்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு குழுக்களின் பரிந்துரைகளையும் முழுமையான விவாதங்களுக்கு உட்படுத்தி மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற்றிடும் வண்ணம், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை தி.மு. கழகம் ஒன்றியத்தில் அமையும் புதிய ஆட்சியைத் தொடர்ந்து வலியுறுத்தும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
ஆளுநர் நியமனம்
ஆளுநர் பதவி தேவையில்வை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று ஆனால் நடைமுறையில் ஆனாநர் பதவி நீடித்துவரும் நிலையில் மாநில ஆளுநர்களை நியமிக்கும்போது அந்தந்த மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைப் பெற்று ஆளுநர்களை ஒன்றிய அரசு நியமிக்க வேண்டும் என நீதிபதி எம்.எம் பூஞ்சி, நீதிபதி வெங்கடாசலையா, நீதிபதி சர்க்காரியா ஆகியோர் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளனர்
இப்பெருமக்களின் பரிந்துரைகளுக்கேற்ப ஆளுநர்களை நியமிக்கும் போது மாநில முதலமைச்சர்களின் ஆலோசனையுடன் நியமித்திட புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாறில் ஆளுநர்களுக்கு அடுவிருந்து விலக்கு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161ஐ தீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநரும் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உறவாக்கப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
அரசியல் சட்டப் பிரிவு 356 அகற்றப்பட வேண்டும்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசகளைக் கலைத்திட வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 356ஐ அகற்றிட தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தும்
உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை பிற வரையறுக்கப்பட்ட இடங்களில் அமைக்கலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 130இல் கூறப்பட்டுள்ளது
12 வது சட்டக் கமிஷனின் தலைவர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திருக ஆர்லெட்சுமணன் அவர்கள் 'சட்டக் கமிஷன் Report No 230 Date 582009 அறிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார். எனவே உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை:
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மக்கள் தொகையிலும் பல்வேறு வகையிலும் வெகு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், புதுவை மாநில அரசு நிர்வாகம், தேவையான அதிகாரங்களைப் பெற்றிடாததால் மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் தாமதமின்றி நிறைவேற்ற இயலாத நிலையில் புதுவை அரசு உள்ளது. எனவே, புதுச்சேரியைவிட குறைந்த மக்கள்தொகை கொண்ட மிசோரம், முழு மாநில அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில், புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத் தந்திட, திமுக முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ளும்.
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
தமிழ் ஆட்சி மொழி
நம் தாய் மொழியாம் செம்மொழித் தமிழ் மொழியைக் காத்திடவும், இந்தித் திணிப்பு-மொழி ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்திடவும், அதற்காக எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதோடு தொடர்ந்து அவ்வழியில் தி.மு.கழகம் உறுதியுடன் பணியாற்றி வருகிறது.
ஒன்றிய அரசுப் பணிகளுக்கும், ஒன்றியப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும், தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் ஆட்சி மொழிகளாக உள்ள மொழிகளையும், இணைத்து எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்குப் புதிய அரசு ஆவன செய்யும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழி
செம்மொழியான தமிழ், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாகப் (Co-Official Language) பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் தமிழிலும் செயல்பட வேண்டுமென்றும், இதற்காக இந்திய அரசிலமைப்புச் சட்டம் 343 ஆவது பிரிவில் உரிய சட்டதிருத்தம் கொண்டுவரவும் புதிய அரசு நடவடிக்கை எடுக்கும்.
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 8வது அட்டவணையில் இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்திற்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றிய அரசின் 2023-2024 நிதிநிலை அறிக்கையில் இந்தி மொழி வளர்ச்சிக்கு ரூ.1487 கோடியும், தமிழ் மொழிக்கு ரூ.74 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது அநீதியாகும். இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்போது அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சமஅளவு நிதி ஒதுக்கப்படும்
தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளுக்கும் சமஅளவு நிதி
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
தமிழ் வளர்ச்சி - செம்மொழி
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் சென்னையில் அமைக்கப் பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil, Chennai) தன்னாட்சி பெற்ற அமைப்பாகத் தொடர்ந்து மேலும் செம்மையுடன் செயல்படும்
ஒன்றியத்தில் புதிய அரசு ஏற்பாட்டில் செம்மொழித் தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் உலகப் பொது மறையான திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட புதிய அரசு ஆவன செய்யும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
தாயகம் திரும்பிய தமிழர் குடியுரிமை
இலங்கையிலிருந்து இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சம் அடைந்த தமிழர்களும், அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாஸ்திரி சிறீமாவோ பண்டார நாயகா இந்திய இலங்கை ஒப்பந்த அடிப்படையில் நாடு திரும்பியவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்களும், அவர்களது குழந்தைகளும் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்
மேலும், ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கும், புதிய ஒன்றிய அரசு மூலம் ஆவன செய்யப்படும். அத்துடன் இவர்களில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்யப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
சேதுசமுத்திரத் திட்டம்
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பெருமளவு உருவாக்கக் கூடிய தமிழ்நாட்டு மக்களின் 150 ஆண்டு காலக் கனவுத்திட்டம்.
பெருந்தலைவர் காமராசரும் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் நீண்ட காலமாகப் போராடி வந்த மாபெரும் திட்டம் சேதுசமுத்திரத் திட்டம். இத்திட்டம், ஏறத்தாழ 2427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.7.2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கணிசமான பணிகள் முடிவடைந்த நிலையில் பிற்போக்குச் சக்திகளால் முடக்கப்பட்டுள்ளது.
சேதுசமுத்திரத் திட்டம் முழுமையாக நிறைவேறவும், தென் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி பெறவும், இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒன்றியத்தில் அமையும் புதிய ஆட்சி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
ரயில்வே- தனி நிதிநிலை அறிக்கை
சிறப்பாகச் செயல்படவும், நிர்வாக வசதிக்காகவும், ரயில்வே நிர்வாகம் படிப்படியாக மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பு, புதிய நகரங்கள் உருவாவதன் காரணமாக, எதிர்காலத்தில் மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில்வே இடையே ஒருங்கிணைப்பு ஏற்பட வசதியாயிருக்கும்.
இடஒதுக்கீடு
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
இளைஞர் நலன்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்திட இஸ்ரோ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்
தமிழ்நாடு அரசின்கீழ் ஏற்படும் கடல் சார்ந்த அரசு வேலை வாய்ப்புகளில் அந்தந்தப் பகுதிகளில் வாழும் பாரம்பரிய, படித்த மீனவர் சமுதாய இளைஞர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும்
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டம் இயற்றப்படும்.
அனைத்து ஒன்றிய அரசுத் தேர்வுகளிலும் தமிழை விருப்ப மொழியாக ஏற்க வகை செய்யப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசுசார்ந்த நிறுவனங்கள், அலுவலகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான ஆண்-பெண் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை அளிப்பது உறுதி செய்யப்படும்.
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
மகளிர் நலன்
சிறுகுறு தொழில்களில் பெண்களை ஊக்குவித்து அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், தற்போது உள்ள 30% மூலதன மானியம் பெண்களுக்கு 35%-ஆக உயர்த்தி வழங்கப்படும்
இந்திய அளவில் விவசாயத்தில் அதிகரித்து வரும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் பெண் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் பிற விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி, மண் ஆரோக்கியம் குறித்த பயிற்சி, செயல்விளக்கம், விதை உற்பத்தி, விதை தொழில்நுட்பம் ஆகியவை குறித்துத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.
சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் இந்தியாவை முன்னேற்றிக் கொண்டு சென்றிட பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை கொடுப்பது அவசியமாகும். அதன் அடிப்படையில் இது சம்பந்தமான சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திட ஒன்றிய அரசை தி. மு. க. வலியுறுத்தும்.
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
இந்திய அளவில் சுய உதவிக் குழுவில் உள்ள மகளிர்களுக்கு வட்டி இல்லா வாகனக் கடன் ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும்.
வீட்டுப்பணியாளர் நலன்களைக் காத்திடும் வகையில் ஒருங்கிணைந்த தேசியச் சட்டம் ஒன்று உருவாக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிமைகள் நிலைநாட்டப்படும்.
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
ரயில்வே துறைக்கு எனத் தனி பட்ஜெட் மீண்டும் உருவாக்கப்படும்
இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சம அளவில் நிதி ஒதுக்கப்படும். அந்தந்த ரயில்வே மண்டல வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 90 % வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
ரயில்வே
இரயில்வே துறைக்குச் சிறந்த வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய இரயில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த விழுப்புரம்-தஞ்சை இடையிலான பிரதான பாதையில் இரண்டாவது இரயில் பாதை அமைக்கப்படும்
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தோர் மற்றும் மாணவர்களுக்கு ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் சென்னை விமான நிலையங்களின் விரிவாக்கப் பணிகள் விரைவுபடுத்தப்படும்
கோவை மற்றும் சென்னை விமான நிலையங்களிலிருந்து வெளிநாட்டிற்கு விமான சேவைகள் அதிகரிக்கப்படும்
விமான நிலையங்கள்
மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாகத் தரம் உயர்த்தப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்
நடுக்கடலில் உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்கள், இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு ஏழாண்டுகள் காத்திருக்கும் அவலநிலையைப் போக்கி, மீனவர் சங்கங்களின் பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட ஆவன செய்யப்படும்.
மீனவர் நலன்
மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்களுக்கு மாற்றுப் பொருளாதார வேலை வாய்ப்புகளை உருவாக்க, மீனவ குடும்ப உறுப்பினர்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மீன்கள் பதப்படுத்துதல், மீன் வளர்ப்பு, மீன் தீவனம் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட இனங்களில் பயிற்சிகள் வழங்கப்படும்
ஒவ்வொரு மீனவருக்கும் மீன்பிடித் தொழிலுக்கு ஏற்ப மானிய விலையில் மீன்பிடி வலைகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் அனைத்து நகரங்களிலும் மீன் சந்தைகள் அமைக்கப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
மீனவர்களுக்கான ஒன்றிய அரசு காப்பீட்டுத் திட்டத்தின் தொகை பின்வருமாறு உயர்த்தப்படும். விபத்தில் இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ. 7 லட்சமாக அதிகரிக்கப்படும். விபத்தில் ஊனமுற்றவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.3.5 லட்சமாக அதிகரிக்கப்படும்
மீனவர்களுக்கு வாழ்வாதார உதவித் தொகையாக இயற்கை சீற்றங்கள் ஏற்படும் நாள்களில் ஒரு நாளைக்கு தலா ரூ. 500 வாழ்வாதாரத்திற்கு இழப்பீடாக வழங்கப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
குழந்தைகள் நலன்
இலவச, தரமான, கட்டாய, குழந்தை நேயக் கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே, அவர்களின் தாய்மொழியில் கிடைக்கவும் 18 வயது அல்லது 12ம் வகுப்பு வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் நீட்டித்து, கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உகந்த பாடத்திட்டங்கள் நவீன நுட்பங்களோடு வடிவமைத்து வழங்கப்படும்
பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் குடும்பச் சூழலை அறிந்து தேவையான பொருளாதார வாய்ப்பினை அளித்து அவர்கள் நிரந்தரமாகப் பள்ளிக் கல்வி பயில்வது உறுதி செய்யப்படும்
போதை உள்ளிட்ட பழக்கங்களுக்கு ஆளாகும் குழந்தைகளுக்குத் தேவைப்படும் உடல் மற்றும் மனநல மருத்துவ வசதிகளும், போதுமான மனநல ஆலோசகர்களும் அனைத்து மாவட்டம் மற்றும் வட்டார அளவில் கிடைத்திட வழி செய்யப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
தொழிலாளர் நலன்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மூலமாக, ஒன்றிய அரசால் வழங்கப்படும்ஓய்வூதியம் குறைந்த பட்சம் மாதம் ரூ.5000/- என வழங்கப்படும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை நாள்கள் 100இல் இருந்து 150 நாள்களாக அதிகரிக்கப்படும். நாடு முழுவதும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ரூ.400 ஊதியம் வழங்கப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றம்
மாநிலப் பாடத்திட்டங்களில் காலநிலைக் கல்வி சேர்க்கப்படவேண்டும். கல்லூரிகளில் காலநிலை மாற்றம் குறித்த இருக்கைகள், ஆய்வுகள் ஊக்குவிக்கப்படும்
இந்தியா 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்டும் என்கிற அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்படும்
குறு, சிறு தொழில் முனைவோர் மற்றும் குடியிருப்புகளில் சூரிய சக்தி உபயோகிக்க ஊக்கப்படுத்தப்படும். அனைத்து இல்லங்களுக்கும் பயனாளிகளின் 20 % பங்களிப்புடன் 80% அரசு மானியம் வழங்கி, சூரியஒளி மின்தகடுகள் (Solar Panels) வழங்கப்படும்
நம்நாட்டில் வானிலை ஆராய்ச்சி மையங்களில் 20 செ. மீட்டர் வரை மழைப் பொழிவைக் கணிக்கும் அளவிற்கே ரேடார்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வெள்ள எச்சரிக்கையைச் சரியான நேரத்தில் தெரிவிக்கும் வகையில் அதி நவீன ரேடார் கருவிகள் அமைக்கப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
சிறுபான்மையினர் நலன்
CAA 2019 சட்டம் ரத்து செய்யப்பட்டு அனைத்து சிறுபான்மையினரும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்தப்படுவார்கள்
இஸ்லாமிய மற்றும் இதர சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்
சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
கல்வி
சென்னையில் உள்ளது போல் இந்திய தொழில்நுட்பக்கழகம்(IIT) மதுரையிலும், இந்திய மேலாண்மைக் கழகம் (IIM) கோவையிலும் அமைக்கப்படும்
5000 இளம் அறிவியல் வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை உருவாக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்
தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்குப்பட்டமற்றும்பட்டமேற்படிப்புகளில் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் வாய்ப்பு அளிக்க தி. மு. க குரல் கொடுக்கும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
விளையாட்டு
சென்னையில் உள்ளது போல் இந்திய தொழில்நுட்பக்கழகம்(IIT) மதுரையிலும், இந்திய மேலாண்மைக் கழகம் (IIM) கோவையிலும் அமைக்கப்படும்
விளையாட்டில் சிறந்துவிளங்குவதற்கும், வட்டார அளவில் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கும் மண்டல அளவில் அதிநவீன சர்வதேச விளையாட்டுப் பயிற்சி மையம் நிறுவப்படும்
நமது நாட்டின் வளமான கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்து வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாக கபடி போட்டியை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
சமூக நீதி
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வீடற்ற மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் உறுதியான வாழ்வாதாரத் உரிமைத் திட்டம் நிறைவேற்றப்படும்
குன்னுவார் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்
கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் வசித்து வரும் வால்மீகி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
பொருளாதாரம்
பருத்தியை 100% CCI மூலம் MSP விலையில் நாடு முழுவதும் வழங்க வழிவகை செய்யப்படும்
தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள் தங்குதடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
தேங்காய்களைக் கொள்முதல் செய்து பதப்படுத்தி வைக்க சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்
அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் தானிய வகைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
குறு சிறு தொழில் (MSME) நிறுவனங்களுக்கு எளிய முறையில் உரிமங்கள் (ESI, EPF, GST, Running License, Inspector of Factories, Trade, Pollution Control etc) வழிவகை செய்யப்படும்
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் மீண்டும் நிர்வகிக்கப்பட்ட விலை முறையின்" (Administered Pricing Mechanism) .
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
வணிகர் நலம்
வணிகம் சம்பந்தமான சட்ட முன்வடிவுகள் கொண்டுவருகின்றபோது வணிக அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து சட்டங்கள் இயற்றப்படும்
பெருவெள்ளம், கனமழை, புயல், பூகம்பம் போன்ற இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்படும் சிறு வணிகர்கள் முதல் வணிக நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், பெருநிறுவனங்கள் என வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும், உரிய ஆய்வு செய்து, பாதிப்பு அளவீட்டு அடிப்படையின்படி இழப்பீடுகள் வழங்கப்படும்
விற்பனை வரி செலுத்துவோர், படிவங்களை நிரப்பும் போது ஏற்படும் தவறுகளை சரி செய்ய வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் தவறுகளுக்காக அவர்களிடம் கூடுதல் வரி வசூலிப்பதும் அவர்களுக்குத் தண்டணை வழங்குவதும் முழுமையாக நிறுத்தப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
நெசவாளர் நலன்
கைத்தறி (உற்பத்திக்கான பொருள்களை முன்பதிவு செய்தல்)-1985 சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு விதிகள் கடுமையாக்கப்படும்.
கைத்தறித் தொழிலைப் பாதுகாக்க நூல்கள், சாயங்கள்/ ரசாயனங்கள் மற்றும் கைத்தறிப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி-க்கு விலக்கு அளிக்கப்படும்
நெசவாளர்களுக்குப் பட்டு, பாவு, ஜரிகை போன்ற மூலப் பொருள்களுக்கு முழுமையாக ஜி. எஸ். டி. வரி நீக்கப்படும்
மனிதர் உருவாக்கும் இழை (Man Made Fibre) என்ற அடிப்படையில் ஜவுளித்துறையை வளர்க்க இத்துறைக்குத் தேவையான இடுபொருட்கள் நியாமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
மருத்துவம் மற்றும் குடும்ப நலன்
அரசு மருத்துவமனைகளில் குறைந்த செலவில் கேன்சர் நோயாளிகளுக்குப் புற்றுநோய் வெள்ளை அணுக்கள் சிகிச்சை முறை (cancer immunotherapy) வழங்கப்படும்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினருக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தப்படும்
இந்தியாவின் 4 பெரும் நகரங்களில் சர்வதேசத் தரம் வாய்ந்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்க புதிய ஒன்றிய அரசு ஆவன செய்யும்
இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பில் சிறப்பாகச் செயல்படும் தனியார் மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து பின்தங்கிய பகுதிகளில் மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
கிராமப்புற மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிய விரும்பும் மருத்துவர்களுக்கு நிதிச்சலுகைகள், வீட்டு வசதிகள் மற்றும் மருத்துவத் தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்புகள் வழங்கப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
விவசாயம்
பாசனத்திற்கு உதவும் வகையில் கேரள மாநில அரசுடன் பேசி பம்பை அச்சன்கோவில்- வைப்பாறு ஆறுகளை இணைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
விவசாய இடுபொருள்களான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரம் போன்ற பொருள்களுக்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்
கோதாவரி-காவிரிதிட்டத்தை விரைவில் நிறைவேற்றச் செய்து தமிழ்நாட்டின் விவசாயம் செழிக்க வழிவகை செய்யப்படும்
ஒரு விவசாயியிடமிருந்து வாங்கப்படும் விதை நெல்லில் 2 ஹெக்டேருக்கான நெல்லுக்கு மட்டும் வழங்கப்படும் உற்பத்தி மானிய வரம்பு 10 டன் நெல் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்
PM-KISAN திட்டத்தின் கீழ் நிதி உதவி ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
ராணுவ வீரர் நலன்
இந்திய ஆயுதப் படை வீரர்களுக்கான நிரந்தர ஆட்சேர்ப்புப் பணி மீண்டும் கொண்டுவரப்படும்
தேசத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்கை அங்கீகரிக்கும் வகையில் இந்திய ஆயுதப் படையினரின் ஓய்வூதியம் மற்றும் பிற நிதிப் பலன்கள் உயர்த்தப்படும்
அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்
கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த கலந்துரையாடல்
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கான திட்டங்கள்
விழுப்புரத்தில் இருந்து காட்பாடி இடையே இரு வழி ரயில் பாதை அமைக்கப்படும்
திண்டிவனம் முதல் நகரி வரையான புதிய ரயில் பாதைத் திட்டத்தில் ஆரணி நிலையத்தில் இருந்து ஒண்ணுபுரம் இணைப்புப் பாதையையும் காஞ்சிபுரம் முதல் செய்யாறு இணைப்புப் பாதையையும் சேர்க்க வழிவகை செய்யப்படும்
விழுப்புரம்
தேஜஸ் விரைவு ரயில் விழுப்புரத்தில் நின்று செல்ல ஆவன செய்யப்படும்
சென்னை- பாண்டிச்சேரி பேசஞ்சர் ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வகை செய்யப்படும்